திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு அணிவிக்கும் 1,296 விதமான நகைகளின் 3 டி விடியோவை பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்
தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் வரும் செப். 30-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருமலையில் துரிதகதியில் நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அபூர்வமான பொருள்களை அதன் விவரங்களுடன் இணைத்து வைக்க வேண்டும். மேலும், ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 1,296 விதமான தங்க, வைர, வைடூரிய, மாணிக்க, முத்து, பவள, மரகத கற்களால் ஆன நகைகளை 3 டி விதத்தில் விடியோ மூலம் அருங்காட்சியகத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்கு ரூ. 40 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவு முழுவதையும் நன்கொடையாளர்கள் ஏற்க முன்வந்துள்ளாக தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.