கர்நாடகாவில் விடுதி ஒன்றில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டத்தில் உள்ள விடுதியில் கொடி கம்பத்தை மாற்ற மாணவர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அந்த கொடிகம்பம் எதிர்பாரதவிதமாக மேலே சென்ற மின்கம்பி மீது உரசியது.
இந்த சம்பவத்தில் மாணவர்கள் மல்லிகார்ஜூன், பஸவராஜ், குமார், கணேஷ், தேவராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.