இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு முழுவதுமாக கண் பார்வை பாதிப்பு!

இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்ததால் 11 பேர் தங்களது கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 
இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு முழுவதுமாக கண் பார்வை பாதிப்பு!

இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேர் தங்களது கண் பார்வையை இழந்துள்ள சோகமான சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் 'தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்' நிகழ்வு நடைபெற்றது. இதில், 14 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை(கேட்டராக்ட்)செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுநாளே 14  பேரில் 11 பேர் தங்களது கண் பார்வையினை இழந்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் தற்போது அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 'அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உடனேயே, அவர்களுக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். ஆனால், எதனால் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், கண்பார்வையினை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசிடமும் நாங்கள் அறிக்கை அளித்துவிட்டோம்' என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பார்வையினை இழந்த நோயாளி ஒருவர் கூறும் போது, "நாங்கள் கண்பார்வையை சரிசெய்ய வந்த இடத்தில் பார்வையினை இழந்துள்ளோம். தற்போது சிகிச்சை எடுத்து வருவதால், எனக்கு அவ்வப்போது பார்வை தெரிகிறது. முழு பார்வை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மற்றொருவர் கூறும்போது, "கண் பார்வையை இழந்ததற்காக எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் தேவையில்லை. எங்களுக்கு முழு பார்வை கிடைக்கச் செய்தால் போதுமானது. சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்று கேள்விப்பட்டு வந்தோம். எதிர்பாராத விதமாக இப்படி ஆகிவிட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

இந்த சம்பவம் இந்தூர் மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com