இந்தியா

அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது: ராஜ்நாத் சிங்

16th Aug 2019 02:12 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

முன்னதாக, பொக்ரானில் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்-க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும் எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT