இந்தியா

பிகாரில் சுயேச்சை எம்எல்ஏ வீட்டில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி: ஏகே-47 துப்பாக்கி பறிமுதல்

16th Aug 2019 06:00 PM

ADVERTISEMENT


மொகமா: பிகாரில் ரவுடியாக இருந்து சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த் குமார் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வீட்டில் இருந்து ஏகே- 47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அதுமட்டுமல்லாமல், நட்வா கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொகாமா பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை எம்எல்ஏவாக இருக்கும் ஆனந்த் சிங் வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், மோப்ப நாய்கள் வரவழைத்ததோடு, வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்களையும் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT