இந்தியா

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணையுங்கள்: தேர்தல் ஆணையம் கோரிக்கை

16th Aug 2019 12:56 PM

ADVERTISEMENT


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய சட்டத் துறைக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

பான் எண், வங்கி எண், ரேஷன் அட்டை மட்டுமல்லாமல், எரிவாயு சிலிண்டருடன் கூட ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியிருக்கும் மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பான ஜனநாயகத்தைக் காக்கும் தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து இதுவரை வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில், போலி வாக்காளர்கள் பதிவாகாமல் தடுப்பதையும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யாமல் தடுக்கும் வகையிலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் 12 இலக்க எண்களைக் கொண்ட ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமே கோரிக்கை வைத்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT