இந்தியா

இந்தியப் பொருளாதார நிலைமை: நிதியமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

16th Aug 2019 01:23 AM

ADVERTISEMENT


இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய அமைச்சக உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை விரிவாக ஆலோசனை நடத்தினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து ஆறாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய அமைச்சகத்தின் உயரதிகாரிகளை சந்தித்து தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார். 
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பல்வேறு துறைகளில் வேகமாக பரவி வரும் மந்த நிலையால் வேலையிழப்பு மட்டுமின்றி முதலீடும் கரைந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி நிதி அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து விரிவாக ஆய்வு நடத்தினார். 
குறிப்பாக, இந்தக் கூட்டத்தில், தற்போது பொருளாதாரத்தில் நிலவி வரும் தேக்க நிலை குறித்தும் அது நீண்டகால அடிப்படையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் இந்த சந்திப்பை அடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் குறிப்பிட்ட சில சலுகை திட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறைந்து போனது. 2014-15-ஆம் நிதியாண்டிலிருந்து ஒப்பிடும்போது மிக குறைந்தபட்ச வளர்ச்சி விகிதமாகும் இது. மேலும், நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வருவதுடன், அந்நிய முதலீட்டு வரத்தும் சரிந்து போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சர்வதேச கரன்ஸி மற்றும் வர்த்தக போரும் இந்தியாவின் பொருளாதார பிரச்னையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT