இந்தியா

அமர்நாத் யாத்திரை நிறைவு

16th Aug 2019 01:18 AM

ADVERTISEMENT


இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை  வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய 46 நாள் அமர்நாத் யாத்திரை, மோசமான வானிலை காரணாக ஜூலை 31ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிறகு, அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டில் மொத்தம் 3.39 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல்சாசன சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT