உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடிதம் எழுதினார். 
அந்தக் கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி விட்டதை சுட்டிக்காட்டியிருந்த ரஞ்சன் கோகோய்,  போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாத காரணத்தால் முக்கிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 33-ஆக (தலைமை நீதிபதி தவிர்த்து) அதிகரிக்கும் வகையில், உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதாவை கொண்டு வந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அந்த மசோதாவை மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த சட்டம் அமலுக்கு வரும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 33-ஆக அதிகரிக்கும். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 3 பேரின் பெயர்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்தப் பரிந்துரையின் மீது மத்திய அரசு முடிவெடுத்து அறிவிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com