இந்தியா

கஞ்சாவை மருத்துவ ரீதியில் பயன்படுத்த சட்ட அங்கீகாரம் தேவை

11th Aug 2019 04:50 AM

ADVERTISEMENT

போதைப் பொருளான கஞ்சாவை மருத்துவ ரீதியில் பயன்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் பேசியதாவது:
மருத்துவ ரீதியாக கஞ்சாவைப் பயன்படுத்த சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். அதில் இருக்கும் மருத்துவ குணங்களை ஆய்வு செய்து வருகிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில்
சட்ட அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சிஎஸ்ஐஆர் இந்திய நிறுவனம் மத்திய அரசின் இந்த அனுமதியைப் பெறும் முதல் நிறுவனமாக இருக்கும் என்று தெரிகிறது. யோகா மற்றும் ஆயுர்வேதத்தை தினசரி வாழ்க்கையில் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
5 மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளில் கஞ்சா செடியும் ஒன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT