மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: அகமதாபாத்தில் வாக்கினை பதிவுசெய்த பிரதமர் மோடி பேட்டி

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: அகமதாபாத்தில் வாக்கினை பதிவுசெய்த பிரதமர் மோடி பேட்டி

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வாக்கு உள்ளது. இதற்காக இன்று காலை குஜராத் வந்த பிரதமர் மோடி காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை. பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டை. வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். 

எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைபோல் வாக்களிப்பதன்மூலம் வாக்காளர் அதை உணரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com