மக்களவைத் தேர்தல்: 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
மக்களவைத் தேர்தல்: 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்டமாக 117 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. இந்நிலையில் 13 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 117 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

குஜராத்தில் 26 தொகுதிகள், கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகள், அசாமில் 4 தொகுதிகளில், கோவாவில் 2 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, திரிபுராவில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 

3ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா (காந்திநகர்), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (வயநாடு), சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் (மைன்புரி), காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (குல்பர்கா), முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் (திருவனந்தபுரம்), சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம்கான், நடிகை ஜெயப் பிரதா (ராம்பூர்), மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் (பைரேலி), மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி (பிலிபித்), தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகன் சுப்ரியா சூலே (பாராமதி) ஆகியோர் முக்கியமானவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com