17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 63.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், மொத்தம் 63.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அஸ்ஸாம்: 78.29 சதவீதம் (4 தொகுதிகள்)
பிகார்: 59.97 சதவீதம் (5 தொகுதிகள்)
சத்தீஸ்கர்: 65.91 சதவீதம் (7 தொகுதிகள்)
தாத்ரா & நாகர் ஹவேலி: 71.43 சதவீதம் (1 தொகுதி)
டாமன் & டையு: 65.34 சதவீதம் (1 தொகுதி)
கோவா: 71.09 சதவீதம் (2 தொகுதிகள்)
குஜராத்: 60.21 சதவீதம் (அனைத்து 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு)
ஜம்மூ & காஷ்மீர்: 12.86 சதவீதம் (1 தொகுதி)
கர்நாடகா: 64.14 சதவீதம் (14 தொகுதிகள்)
கேரளா: 70.21 சதவீதம் (அனைத்து 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு)
மகாராஷ்டிரா: 56.57 சதவீதம் (14 தொகுதிகள்)
ஒடிஸா: 58.18 சதவீதம் (6 தொகுதிகள்)
திரிபுரா: 78.52 சதவீதம் (1 தொகுதி)
உத்தரப் பிரதேசம்: 57.74 சதவீதம் (10 தொகுதிகள்)
மேற்கு வங்கம்: 79.36 சதவீதம் (5 தொகுதிகள்)