புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: அனந்தநாக் வாக்குச்சாவடியைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்

ENS | Published: 23rd April 2019 01:14 PM


நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

பாஜகவின் தேசியச் செயலர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மிகுந்த பாதுகாப்புடன் காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மெகபூபா முஃப்தியின் பேரவைத் தொகுதியான அனந்தநாக்கில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 1903 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த வாக்குசாவடிகளில் மதியம் வரை வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். வெறிச்சோடி இருக்கும் வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் வருகைக்காக தேர்தல் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

அகமதாபாத்தில் இன்று தனது வாக்கினை செலுத்திய பிரதமர் மோடி, டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகளிடம் இருக்கும் ஐஇடி - கண்ணிவெடிகுண்டை விடவும், வாக்காளர்களின் கையில் இருக்கும் வோட்டர் ஐடி எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை மிகவும் சக்தி வாய்ந்தது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

என் மீது எந்த குற்றச்சாட்டு இல்லை என ப. சிதம்பரம் பேட்டி
அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
சிதம்பரம் எங்கே சென்றார்? 
உத்தரபிரதேசத்தில் மூன்று அம்பேத்கர் சிலைகள் சேதம்: போலீஸ் குவிப்பு