வியாழக்கிழமை 23 மே 2019

இளைஞரால் மேடையில் 'மூக்குடைந்த' திக்விஜய் சிங்: வைரலாகும் விடியோ

DIN | Published: 23rd April 2019 11:24 AM

 

முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைருமான திக்விஜய் சிங், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் சாத்வி பிரக்யா தாகூர் களமிறக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ரூ.15 லட்சம் குறித்து திக்விஜய் சிங் விமர்சித்தபோது, அங்கிருந்த இளைஞரால் மேடையில் மூக்குடைந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில், ரூ.15 லட்சம் தருவதாக மோடி அறிவித்தது பொய் என்பவர்கள் கையை தூக்குங்கள் என்றார். அப்போது அங்கிருந்த பெரும்பான்மையானவர்கள் தங்கள் கைகளை உயர்த்திக் காண்பித்தனர்.

இதையடுத்து ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறியது உண்மை என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றபோது ஒரேயொரு இளைஞர் மட்டும் தன் கையை உயர்த்தினார். அப்போது அந்த இளைஞரை மேடைக்கு அழைத்த திக்விஜய் சிங், உண்மையிலேயே நீங்கள் ரூ.15 லட்சம் பெற்றிருந்தால், உங்களுக்கு இங்கேயே பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றார். 

ஆனால் அந்த இளைஞர், பிரதமர் மோடி துல்லியத் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்தார் என்று கூற, திக்விஜய் சிங் முகம் சிவந்தது. நீங்கள் ரூ.15 லட்சம் பெற்றீர்களா? இல்லையா? என்பதை மட்டும் கூறுங்கள். துல்லியத் தாக்குதல் பேச்செல்லாம் தேவையில்லை என்று கூறி அந்த இளைஞரை மேடையில் இருந்து விரட்டினார். 

இந்த விடியோ பதிவு தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மக்களவைத் தேர்தலின் 6-ஆவது கட்டமாக மே 12-ஆம் தேதி போபால் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை
அமேதியில் பின் தங்குகிறார்; வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார் ராகுல்
ஆந்திர முதல்வராக 30-ஆம் தேதி பதவியேற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி
மீண்டும் மோடி ஆட்சி 2.0: செய்தி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடியின் தாய் 
தேர்தல் முடிவு: இன்று ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு