லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

"ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாதுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு பாஜக சதி செய்கிறது' என்று அவரது மனைவியும் ஆர்ஜேடி தேசிய துணைத் தலைவருமான ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை
லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல பாஜக சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

"ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாதுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு பாஜக சதி செய்கிறது' என்று அவரது மனைவியும் ஆர்ஜேடி தேசிய துணைத் தலைவருமான ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலு, பல்வேறு உடல் உபாதைகளுக்காக ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சுட்டுரையில் ராப்ரி தேவி ஞாயிற்றுக்கிழமை விடியோ பதிவொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மத்தியிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக, ராஞ்சி மருத்துவமனையில் லாலுவுக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறது. லாலு மட்டுமன்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். அவர்களால் அதனை செய்யவும் முடியும். 
பாஜகவின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். லாலுவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள், வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
மருத்துவமனையில் உள்ள லாலுவை சந்திப்பதற்காக, தேஜஸ்வி சனிக்கிழமை சென்றார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. லாலுவை சந்திக்க பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று சர்வாதிகார பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று ராப்ரி தேவி அந்த விடியோவில் கூறியுள்ளார். சனிக்கிழமைதோறும் லாலுவை சந்திக்க அதிகபட்சம் 3 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சட்டம்-ஒழுங்கு காரணத்தை கூறி, அந்த சந்திப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து முறையிட ஆர்ஜேடி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
பாஜக மறுப்பு: இதனிடையே, ராப்ரி தேவியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது; அபத்தமானது என்று பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறுகையில், "லாலுவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. உண்மையில், இரு கட்ட தேர்தல்களுக்கு பிறகு, ஆர்ஜேடிதான் தோல்வி பீதியில் உள்ளது' 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com