திங்கள்கிழமை 22 ஜூலை 2019

மேற்கு வங்கத்தில் மோடி போட்டி? அமித் ஷா விளக்கம்

ANI | Published: 22nd April 2019 12:04 PM

 

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியதற்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கமளித்தார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா பேசியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் கீழ் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று அனைவருக்கும் இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக-வின் சங்கல்ப பத்திரத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம். 

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதலில் தாக்கல் செய்யப்படும். அதன்மூலம் நாட்டிலுள்ள அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத்தரப்படும். பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஏற்படுத்தப்படும். எனவே அதுகுறித்து அகதிகள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்படுவார்கள்.

மேற்கு வங்கத்தில் சரஸ்வதி பூஜையும், துர்கா பூஜையும் மீண்டும் உரிய மரியாதையுடன் நடத்த பாஜக-வால் மட்டுமே முடியும். மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : BJP President Amit Shah Prime Minister West Bengal Kolkata PM Modi

More from the section

"கை'யறு நிலையில் காங்கிரஸ் !
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு
கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு
ஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி