இது நாட்டின் கடைசித் தேர்தல் அல்ல: சரத் பவார்

தற்போதைய மக்களவைத் தேர்தலே, நாட்டின் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும் என்று நான் கருதவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்றால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிடுவார் என்றும், இதுவே நாட்டின் கடைசித் தேர்தலாக இருக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மக்களவைத் தொகுதியில் சரத் பவார் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தல் மிக முக்கியமானதுதான். ஒட்டுமொத்த உலகும் இதை கவனித்துக் கொண்டிருக்கிறது. நேருவும், காந்திகளும்தான் ஜனநாயகத்தை காத்தவர்கள். இதுதான் கடைசித் தேர்தலாக இருக்கும் என்று சிலர் (மம்தா பானர்ஜி) சொல்கிறார்கள். இது அவர்களது கருத்தாக இருக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை என்றார் பவார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com