வெளிப்படைத்தன்மைக்காக, அமைப்புகளை சிதைக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளை யாரும் விரும்பாத காரணத்துக்காக, அதன் பெயரில் அமைப்புகளை சிதைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 
வெளிப்படைத்தன்மைக்காக, அமைப்புகளை சிதைக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறைகளை யாரும் விரும்பாத காரணத்துக்காக, அதன் பெயரில் அமைப்புகளை சிதைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்டிஐ வரம்புக்குள் வரும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலர் மற்றும் மத்திய தகவல் அலுவலர் ஆகியோர் 2010-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று (வியாழக்கிழமை) தெரிவிக்கையில்,  

"நீதிபதிகளாக விரும்பும் நல்ல நபர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். அவர்கள் தங்களது எதிர்மறையான விஷயங்கள் குறித்து அச்சப்படுகின்றனர். சரியோ, தவறோ அந்த விஷயம் பொது தளத்துக்கு வந்துவிடுகிறது.

இறுதியில், அவர்கள் நீதிபதிகளாக மட்டும் ஆகவில்லை, அவர்களது நன்மதிப்பும் பாதிக்கப்படுகிறது. அது அவர்களது குடும்பம் மற்றும் வாழ்க்கையையும் பாதிக்கிறது. வெளிப்படைத்தன்மைக்காக அமைப்புகளை சிதைக்கக்கூடாது" என்றார்.  

மேலும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com