அத்வானியின் கருத்துக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு

எதிர்க்கட்சிகளை பாஜக ஒருபோதும் தேசவிரோதிகளாக கருதியதில்லை என்ற பாஜக மூத்த தலைவர் அத்வானியின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். 
அத்வானியின் கருத்துக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு


எதிர்க்கட்சிகளை பாஜக ஒருபோதும் தேசவிரோதிகளாக கருதியதில்லை என்ற பாஜக மூத்த தலைவர் அத்வானியின் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பாஜக தோன்றிய தினமான ஏப்ரல-6 ஐ முன்னிட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வலைப்பதிவில் தெரிவிக்கையில், "அரசியல் ரீதியாக முரண்படுபவர்களை பாஜக ஒருபோதும் எதிரிகளாகவோ, தேச விரோதிகளாகவோ கருதியதில்லை" என்றார்.  

அத்வானியின் இந்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

"மூத்த அரசியல்வாதியாகவும், முன்னாள் துணைப் பிரதமராகவும் மற்றும் பாஜகவின் நிறுவனராகவும் அத்வானி ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தங்களது கருத்தை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தேச விரோதிகள் கிடையாது. அத்வானியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் அத்வானி இடம்பெறாததற்கு மம்தான பானர்ஜி தனது காட்டமான விமரிசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com