ராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

ராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை உறுதி செய்தது. 
ராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

ராஜஸ்தானில் 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை உறுதி செய்தது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானில் தற்போது வரை 22 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு தேசிய நோய் தடுப்பு ஆணையத்தின் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் ஸிகா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்து முழுநேரம் கண்காணிக்கப்படும் என்றிருந்தது.

மேலும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் அங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் மற்றும் கொசுக்களின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் ஏற்படுத்த முதல்கட்டமாக 7 பேர் கொண்ட குழு அங்கு அமைக்கப்படுகிறது. 

வைரஸ் கிருமி ஆய்வுக்கூடங்களுக்கு கூடுதல் ஆய்வு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. பொது சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப ஆய்வாளர்கள் குழு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மற்றொரு குழு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜெய்பூரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஸிகா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ராஜஸ்தான் முழுவதும் போர்கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தேசிய சுகாதாரத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com