இந்தியாவில் குறைந்துவரும் மழை மேகங்களின் அடர்த்தி! வறட்சியை நோக்கி நகர்கிறதா இந்தியா?

இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வறிக்கையில் கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியா முழுவதிலும் குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறைந்துவரும் மழை மேகங்களின் அடர்த்தி! வறட்சியை நோக்கி நகர்கிறதா இந்தியா?

இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வறிக்கையில் கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியா முழுவதிலும்
குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது.

ஆங்கில பத்திரிகையான ‘மௌசம்’ இதழில் வெளியாகிவுள்ள இந்த ஆய்வறிக்கையில், 1960 முதல் 2010 வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம், மழை மேகமூட்டங்களின் அளவு குறைந்துள்ளதாக இந்திய வளிமண்டலவியல் துறை கணித்துள்ளது. இதனால் இந்திய முழுவதும் மழைக்காலத்தில் பெய்யும் மழை அளவும் 1.22 சதவீதம் சரிந்துள்ளது.

இந்தியாவின் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில்தான் 70 சதவீதம் மழை மற்றும் பனிப்பொழிவுகள் ஏற்படுகின்றன. மழை மேகங்களின் அடர்த்தி குறைவதால் பருவமழை காலத்திற்கான நாட்களும் நிலையான அளவில் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது.

“இந்தியாவில் மேகங்களின் தன்மையை பற்றி மேற்கோண்ட முதல் ஆய்வு இதுதான், ஏற்கனவே எல்லாப் பகுதிகளிலும் சராசரியாக ஒரு முழு மழை நாளை நாம் நிச்சயமாக இழந்துவிட்டோம், இது முக்கியத்துவம் தரப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை” என்றுக் கூறியுள்ளார் ஓய்வுபெற்ற இந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சியாளர் ஏ.கே.ஜாஸ்வால்.

குறைவான மேகங்களின் அடர்த்தி மற்றும் படிப்படியாக குறைந்து வரும் மழை நாட்களின் எண்ணிக்கை இவை இரண்டிற்கும் வலுவான தொடர்பு ஒன்று
இருக்கிறது, இவை பருவநிலை மாற்றத்திற்கு வழிவகுத்து, அதிகபட்ச வெப்பநிலையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.   

ஆண்டு ஒன்றிற்கு நாட்டிற்குத் தேவையான 70 சதவீத நீர்வளம் பருவமழை காலத்தில்தான் கிடைக்கிறது. 1961 - 2010 ஆண்டுகளுக்கு இடையேயான 50
வருடங்களில் இந்த அளவு கணிசமாக குறைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் கிடைத்த கவலைக்குரிய தகவல் ஆகும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள நாடு
முழுவதும் 215 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் மழை மேகமூட்டத்தின் அளவு 61% குறைந்துள்ளது!!

1961-ஆம் ஆண்டு 46.7 சதவீதமாக இருந்த பருவகால மழை மேகமூட்டத்தின் அளவு 2009-இல் 33.5 சதவீதமாகக் குறைந்து இருக்கிறது என்று
கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கங்கை அமைந்துள்ள சமவெளி பகுதிகளில் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மேகமூட்டங்களின் அளவு அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வில்
தெரியவந்தாலும், அதைத் தவிர நாட்டின் மற்ற இடங்களில் இவை குறைந்திருக்கின்றன. இவை ஏன் ஒவ்வொரு இடத்திற்கு மாறுபடுகின்றன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். 

பூமியின் மேற்பரப்பானது சுமார் 60 சதவீதம் மேகங்களால்தான் மூடப்பட்டுள்ளது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பது போன்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இந்த மேகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர் ஆவியாகி மறுசுழற்சியில் இடுப்பட, மழை மற்றும் பனியை உற்பத்தி செய்வது,
வெளிச்செல்லும் நீளமான கதிர்வீச்சுகளை தடுப்பது என உலகம் முழுவதிலும் உள்ள ஆற்றல்கள் சமநிலையில் வைக்க மேகங்கள் செயல்படுகின்றன. 

இன்றைய சூழலில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாகுதலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கீரின் ஹவுஸ் வாயு மற்றும் இன்ஃபிராரெட் ஒளிக்கதிர்
போன்றவை வளிமண்டலத்தைப் பாதிக்காமல் இருக்க மேகங்கள்தான் தடுத்து நிறுத்தும். எனவே தற்போது மேல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்
மண்ணுலகையும் பாதிக்கக்கூடியதாக அமையும்.

நம் இந்தியா ஒரு விவசாய நாடு, இங்குள்ள விவசாயிகள் அனைவரும் அதிகமாக பருவமழையைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் மழை பொய்த்து போனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அது மிகப்பெரிய இழப்பை நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் ஏற்படுத்துகிறது. தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலைக்கும் குறைந்து வரும் இந்த மேகமூட்டங்களின் அடர்த்திதான் ஒரு வகையில் காரணமாகவும் இருக்கிறது. 

இன்றும் நம் நாட்டில் விவசாயிகள் பாரம்பரிய முறையில்தான் வேளாண்மை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் மாசுபட்டு
வீணாவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் குளங்களை அதிகம் உருவாக்க வேண்டும். 

மழை நாட்களின் அளவும், மழைப் பொழிவும் குறைந்து கொண்டிருக்கும் இன்னிலையில் வானிலிருந்து கிடைக்கும் ஒரு மழைத்துளியைக் கூட வீணாக்காமல் அவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்தால் அதை ரசித்து கவிதை எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்த மழைத்துளிகள் மண்ணைத்தொடவும் வழி செய்வோம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com