செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க!

Published: 01st June 2019 04:07 PM

இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:

ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.

வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.

முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.

ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.

துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : face cream pimple முகப்பரு பரு முகம் அழகு

More from the section

இனி தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது
குடி குடியைக் கெடுக்கும்: நைட் அடித்த சரக்கின் மப்பு இறங்காமல், காலையில் திணறும் நபர்களுக்கு..
பகுதி 2 - வளர்ப்பைச் சிறப்பிக்க, ஆரம்பத்திலேயே ஆரம்பிப்போம்..
இளம் பருவத்தினரும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்!
பூரி எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?