உலக அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லாரின் உடல் அமைப்பு நம்மில் பலரை வியப்பும் அதே சமயம் பொறாமையும் அடைய செய்திருக்கும். இவர்களைப் போன்ற அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியத்தை அவரே கூறியிருக்கிறார்.
1. காலை உணவைத் தவிர்க்க கூடாது: காலை உணவைத் தட்டிக்கழிப்பது உடல் அமைப்பிற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அது நாளின் முடிவில் பசி வேதனையை அதிகரித்து நம்மை அதிகம் சாப்பிட தூண்டும்.
2. சிறிய தட்டை உபயோகியுங்கள்: சிறிய தட்டை உபயோகிப்பது இயற்கையாகவே நம்மைக் குறைவாக சாப்பிடத் தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாகச சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டதே எனக் கவலை படுவதில் பயனில்லை.3. சர்க்கரையைத் தவிருங்கள்: பழங்களை ஜூஸாக்கி குடிக்கும் போதும் அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதிலும் முக்கியமாகச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும்.
உணவு அட்டவணை:
இவற்றை எல்லாம் சாப்பிடும் போது அதிக கொழுப்பு சத்து நிறைந்த எந்த ஒரு விஷயத்தையும் ருசிக்காகவும் சேர்க்கக் கூடாது. இதை அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் பின்பற்றினாலும் உலக அழகியின் உடல் அளவான 34-26-34 அளவைப் பெற்றுவிடலாம். வாழ்த்துக்கள்!