வெள்ளிக்கிழமை 13 செப்டம்பர் 2019

எளிய மருத்துவக் குறிப்புகள்

மாதவிடாய் சார்ந்த பிரச்னைகள் தீர வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றை அரைத்து சாப்பிட வேண்டும்.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் நாவல் பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.
தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அழியும்.
பிரண்டை, மல்லித்தழை, தூதுவளை, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட கால் வலி நீங்கும்
கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்
கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை ஏற்படாது
இரண்டு ஏலக்காயை தோல் நீக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு இரண்டு நிமிடம் கழித்து வெந்நீர் பருகினால் இருமல் கட்டுப்படும்
கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி, வாய்ப்புண் ஆகியவை சரியாகும்
தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க காலை மாலையில் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள்
மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும்.

புகைப்படங்கள்

சம்யுக்தா மேனன்
அழகி காஜல் அகர்வால்
புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் பிஎஸ்-6 அறிமுகம்

வீடியோக்கள்

தினமணி செய்திகள் | 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட நடராஜர் சிலை | (12.09.2019) Top 5 News |
அசுரன் படத்தின் டிரைலர்
BMW G310R & G310GS BIKE REVIEW IN TAMIL | bike comparison | Roaduku Puthusu |