மனநல மருத்துவம்

வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க பாஸ்

22nd Sep 2019 01:13 PM | ராக்கி

ADVERTISEMENT

'அமைச்சரே... ஏன் அவனை அடிக்குறீங்க?''
'மன்னா... நமது ராணுவ ரகசியங்களை வெளியே சொல்லிவிட்டான்'
'நமக்குத்தான் ராணுவமே கிடையாதே'
'அதைத்தான் சொல்லிவிட்டான்'

*வார்த்தை ஒன்றுதான்*

மருத்துவர் சொன்னால் மகிழ்ச்சி

ADVERTISEMENT

ரேசன் கடைகாரர் சொன்னால் வருத்தம்

*" சர்க்கரை இல்லை"*

*வார்த்தை ஒன்றுதான்*

அம்மா  சொன்னால் பாசம்

மனைவி சொன்னால்  திகில்

*"உடம்பு எப்படி இருக்கு"*

*வார்த்தை ஒன்றுதான்*

கணவர் சொன்னால் மகிழ்ச்சி

மகன் சொன்னால் வருத்தம்

*" அரியர்ஸ் வந்து இருக்கிறது"*

*வார்த்தை ஒன்றுதான்*

மனைவி  சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி

கணவன் சொன்னால் மனைவிக்கு வருத்தம்

*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*

**

'ஏன்டி மதியச் சாப்பாட்டுக்கு ஊறுகாயை வைத்து அனுப்பினாய்?''
'இன்னைக்கு மாசக் கடைசிங்கிறதை ஞாபகப்படுத்தத்தான்'

-டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT