மனநல மருத்துவம்

வீக் எண்ட் ஜோக்ஸ்! சிரிங்க பாஸ் சிரிங்க

13th Oct 2019 05:49 PM

ADVERTISEMENT


'தலைவருக்கு நிறைவேறாத ஆசை ஒண்ணு இருக்கா... என்னது?'
'சொந்தமா ஒரே ஒரு ரயில் இருக்கணும்னு ஆசைப்படுறாராம்'

பி.பரத், கோவிலாம்பூண்டி.

'என் மருமகள்  சண்டை போடறதுக்கு  ஐ.எஸ்.ஐ முத்திரை  கொடுக்கலாம்'
'எப்படி?'
'தரக்குறைவான  வார்த்தைகளை  உபயோகிக்க  மாட்டாள். அதான்'

ADVERTISEMENT

த.ஜோதி, சென்னை.

'டாக்டர் என் கணவர் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டே தூங்குகிறார்'
'ஏம்மா அவர் தூங்கும் போது கூட வாயைத் திறக்கக் கூடாதா?'

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

'என்னங்க நான் செஞ்ச பொங்கல் எப்படி இருந்துச்சி?'
'சொல்லக் கூடாதா? நான் கஞ்சின்னு நினைச்சுக் குடிச்சுட்டேன்'

பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.

'குடிச்சுச் செத்தாரே உன் அப்பா... உனக்கு ஏதாவது வச்சிட்டுப் போனாரா?'
'ஒரு சொட்டு கூட வச்சுட்டுப் போகலை'

டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

'உங்க ஓட்டலில்  இட்லி பஞ்சு மாதிரி  இருக்குமா?'
'சந்தேகமாயிருந்தால்  தீப்பெட்டி தர்றோம்; கொளுத்திப்   பாருங்கள் சார்'

சங்கீத சரவணன், மயிலாடுதுறை.  

'உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதோ ஒற்றுமை இருக்குன்னு சொன்னீங்களே... என்ன அது?'
'நான் எது சொன்னாலும் அவ காதுல வாங்க மாட்டா.... அவ எது சொன்னாலும் நான் மனசுல வாங்க மாட்டேன்'

 வி.ரேவதி, தஞ்சை.

'முக்கிய'  தலைவர் கைது'
'இதுக்கெல்லாமா கைது பண்ணுவாங்க?'

 எ.கே. ஸ்ரீசாகம்பரி கண்ணன், அந்தியூர்.

Tags : jokes relax please smile please
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT