உணவே மருந்து

சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்னைக்கு அருமருந்து!

12th Sep 2022 04:48 PM

ADVERTISEMENT

 

தேவையான பொருட்கள்

பாலக்  கீரை     -  ஒரு கைப்பிடி

சீரகம்.               -   10 கிராம்

ADVERTISEMENT

மஞ்சள் தூள்     -  சிறிதளவு

செய்முறை

முதலில்  பாலக் கீரையை  நன்றாகச் சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பாலக் கீரை , சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளியேறும் பிரச்சனையைத் தீர்த்து சிறுநீர்ப்பையை வலுப்படுத்த  உதவும்.

மேற்கூறிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும்   இந்தக் கசாயத்தைத் தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வரவும்.

இரவு படுக்கப்போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

-கோவை பாலா

ADVERTISEMENT
ADVERTISEMENT