உணவே மருந்து

வாதம் சார்ந்த குறைபாடுகளைத் தீர்க்க உதவும் அருமருந்து

18th Jan 2022 12:51 PM

ADVERTISEMENT

 

தேவையான பொருட்கள்

அரைக் கீரை   -  ஒரு கட்டு

சுக்கு       -   ஒரு கிராம்

ADVERTISEMENT

மிளகு     -   10 கிராம்

பூண்டு    -  10 பல்

சின்ன வெங்காயம்  -  10 

பெருங்காயம்    -  சிறிதளவு

நெய்      -   தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு அரைக் கீரையை ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். ஆய்ந்து வைத்துள்ள அரைக் கீரையுடன் பூண்டு பல் மற்றும் சின்ன வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து நீராவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கு மற்றும் மிளகை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில்   தேவையான அளவு நெய் ஊற்றி அதில்  மிளகு, சுக்கு மற்றும் பெருங்காயத்தைச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து பின்பு நீராவியில் வேகவைத்த கீரை, பூண்டுப் பல் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு கிளறி எடுத்துக் கொள்ளலாம். மேற்கூறிய பொருட்களை அவரவர்களின் தேவைகேற்ற அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

வாதம் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும்  தீர்க்க உதவும்.

சாப்பிடும் முறை

இவ்வாறு வதக்கிய அரைக்கீரை பொறியலை தினமும் ஒரு வேளை உணவாக வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic

ADVERTISEMENT
ADVERTISEMENT