உணவே மருந்து

தாங்க முடியாத வயிற்று வலிக்குத் தீர்வு

22nd Sep 2019 11:01 AM | கோவை பாலா

ADVERTISEMENT

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !! காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!!

கீரைகள்  ' நடமாடும் சித்தர்கள் '

வாலான் அரிசிக் கஞ்சி

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

வாலான் அரிசி - அரை கப்
டர்னிப் காய்  தோல் சீவித் துருவியது - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்  நறுக்கியது - 5  கிராம்
இஞ்சி தோல் நீக்கியது - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் வாலான் அரிசியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
  • டர்னிப் காயை தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் வாலான் நொய்யரிசி மற்றும் டர்னிப் துருவல் இரண்டையும் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்தவுடன் அதில் சிறிதளவு இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து  கொதிக்க வைக்கவும்.
  • நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டுக் நன்கு கலக்கி இறக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : இந்த கஞ்சியை வயிற்று வலி , வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுப் போக்கு குறைபாட்டை சீர் செய்யும் கஞ்சியாக இருப்பதால் இதனை உணவாக  எடுத்துக் கொள்ள உதவும் உன்னத கஞ்சி.

படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT