சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர்சுருக்கைப் போக்கும் ஆரோக்கிய பானம்

சாலாமிசிரி, தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் இஸ்பகோல் வித்து இவை மூன்றையும்
சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர்சுருக்கைப் போக்கும் ஆரோக்கிய பானம்

சாலாமிசிரிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாலா மிசிரி - 100  கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு - 100 கிராம்
இஸ்பகோல்வித்து - 100 கிராம்
பசும்பால் - 100 மி.லி
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை : முதலில் சாலாமிசிரி, தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் இஸ்பகோல் வித்து இவை மூன்றையும் தனித்தனியே பொடித்து வைத்து பின்பு மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 100 மி.லி அளவு பாலை ஊற்றி அதில் அரைத்து கலந்து வைத்துள்ள பொருட்கள் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து பாலுடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். பின்பு இதனை மிதமான தீயில்  எரியவிட்டு கொதிக்க வைத்து கஞ்சியாக காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

பயன்கள் : இந்தக் கஞ்சி உடலுக்கு வலிமையை கொடுக்கும் ஆற்றல் உள்ளதால்  தினமும் அல்லது வாரம் நான்கு நாட்கள் இதனை பருகி வரலாம். சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர்சுருக்கால் பாதிக்கப்படும் பொழுது இந்தக் கஞ்சியை தயார் செய்து தொடர்ந்து பருகிவந்தால் பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபட உதவும் மருத்துவ கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com