வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் ஆரோக்கிய உணவு

By கோவை பாலா| Published: 10th September 2019 12:04 PM

பச்சரிசி  கடலைப் பருப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 150  கிராம்
கடலைப் பருப்பு - 20 கிராம்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
லவங்கப் பட்டை -  2 எண்ணிக்கை
கிராம்பு - 2 எண்ணிக்கை
ஏலக்காய் - 2 எண்ணிக்கை
பூண்டு - 10

செய்முறை

முதலில் பச்சரிசை தண்ணீர் ஊற்றி நன்றாக களைந்து வடிகட்டி நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் இவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். உடைத்த நொய்யரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறு பங்கு நீர் ஊற்ற வேண்டும். பின்பு அதனுடன் கடலைப்பருப்பு, வெந்தயம், பூண்டுப் பல் சேர்த்து அனைத்தையும் வேக வைக்க வேண்டும். அதனுடன்  உப்பு சேர்த்துக் கொள்ளவும். 

நொய்யரிசி நன்கு வெந்தவுடன் அதில் நெய்யில் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன்  இறக்கி வைத்துக் கொள்ளவும். இன்னும் கஞ்சியின்  சுவையை மேலும் அதிகரிக்க வேண்டுமானால் முருங்கைக் கீரையைச் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்கள் : இந்த அற்புதமான கஞ்சியை தினமும் ஒருவேளை உணவாக அருந்தி வந்தால் உடலில் உண்டாகும் சோர்வை நீக்கி உடலுக்கு சக்தியையும் , வலிமையையும் கொடுக்கும். இதனை தொடர்ந்து குடித்து வரும்பொழுது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்..

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : healthy food health recipe healthy food recipes food recipes health and lifestyle health tips

More from the section

சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்
காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி
முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்