உணவே மருந்து

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவு

7th Sep 2019 05:54 PM | கோவை பாலா

ADVERTISEMENT

பச்சரிசி  கடலைப் பருப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

பச்சரிசி -  150  கிராம்
கடலைப் பருப்பு -  20 கிராம்
வெந்தயம் -  ஒரு ஸ்பூன்
இலவங்கப் பட்டை -  2 எண்ணிக்கை
கிராம்பு - 2 எண்ணிக்கை
ஏலக்காய் - 2 எண்ணிக்கை
பூண்டு - 10

செய்முறை

ADVERTISEMENT

முதலில் பச்சரிசியை தண்ணீர் ஊற்றி நன்றாக களைந்து வடிகட்டி நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் இவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். உடைத்த நொய்யரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறு பங்கு நீர் ஊற்ற வேண்டும். பின்பு அதனுடன் கடலைப் பருப்பு, வெந்தயம், பூண்டுப் பல் சேர்த்து அனைத்தையும் வேக வைக்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். நொய்யரிசி நன்கு வெந்தவுடன் அதில் நெய்யில் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும். இன்னும் கஞ்சியின் சுவையை மேலும் அதிகரிக்க வேண்டுமானால் முருங்கைக் கீரையைச் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

Tags : food for health health tips tips for health healthy tasty food
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT