கோதுமை நொய்க் கஞ்சி
தேவையான பொருட்கள்
கோதுமை நொய் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
- முதலில் கோதுமை நொய்யை வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- கொதித்த தண்ணீரில் வறுத்த கோதுமை நொய்யை சேர்த்து வேகவைத்து கஞ்சியாக்கிக் கொள்ளவும்.
- பின்பு அதனை இறக்கி அதனுடன் தேன் சேர்த்து பருகி வரவும்.
பயன்கள்
இந்த கஞ்சியை உடல் இளைக்க வேண்டுமென்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் இளைத்து அழகிய தோற்றத்தை கொடுக்கும் உன்னதமானக் கஞ்சி.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com