22 செப்டம்பர் 2019

சைனஸ், காசநோய், ரத்தசோகை குறைபாட்டை நீக்கும் அற்புத ஜூஸ்

By கோவை பாலா| Published: 16th May 2019 11:05 AM

 

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 100 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
ரோஜா இதழ்கள் - ஒரு கைப்பிடி
குங்குமப் பூ - ஒரு கிராம்
தேன் - 3 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : முதலில் ஆப்பிளை புட்டுத் துருவல் கொண்டு துருவி அத்தடன் ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப் பூ இவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து  அத்துடன் தேன், தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி பருகவும்.

பயன்கள் : இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அற்புதமான ஆற்றலைக் கொடுத்து பலப்படுத்தும். மேலும் சைனஸ், ஆஸ்துமா, காசநோய் போன்ற குறைபாட்டை நீக்கும் ஆரோக்கியமான அற்புதமான ஜூஸ் இந்த ஆப்பிள் ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : sinus cold cough breathing சளி இருமல்

More from the section

"ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க நடவடிக்கை'
சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர்சுருக்கைப் போக்கும் ஆரோக்கிய பானம்
சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்