சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

ஆண்மை அதிகரிக்கச் செய்யும், இளைத்த உடல் பெருக்க உதவும் அருமருந்து இது!

By கோவை பாலா| Published: 11th May 2019 10:52 AM

அம்மான் பச்சரிசிக் கீரை சத்துமாவு

தேவையான பொருட்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை - 200 கிராம்                     
(நிழலில் உலர்த்தியது)
கசகசா - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
உடைத்த கடலை - 50 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
பாதாம் பருப்பு - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்
கொண்டைக் கடலை - 50 கிராம்
ஜவ்வரிசி -  50 கிராம்
பசுநெய் - 100 கிராம்
ஏலக்காய் - 25 கிராம்

செய்முறை : வாணலியில் பசுநெய்யை ஊற்றி அம்மான் பச்சரிசிக் கீரையை தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்பு அம்மான் பச்சரிசிக் கீரையை தனியாக வறுத்து மற்ற பொருள்களுடன் சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொளாளவும்.

பயன்கள் : இந்த சத்து மாவுவை அடிக்கடி கஞ்சியாக காய்ச்சிக் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும் மேலும் ஆண்மை எழுச்சியையும் அதிகரிக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : medicine health energy drink சத்துமாவு ஆண்மை அதிகரிக்க

More from the section

சிறுநீர் எரிச்சல் மற்றும் நீர்சுருக்கைப் போக்கும் ஆரோக்கிய பானம்
சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்
காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி