திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

இடுப்பு பகுதிக்கு வலிமையை கொடுக்கவும், தாம்பத்தியத்தில் அதிக நாட்டத்தையும் உண்டாக்கும் ஆரோக்கிய பானம் இது!

By கோவை பாலா| Published: 10th May 2019 02:35 PM

உளுந்தங் கஞ்சி

தேவையான பொருட்கள்

நொய்யரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
மிளகு - 10 எண்ணிக்கை
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை : முதலில் மிளகு, சீரகம் இரண்டையும் நெய்யில் வறுத்து அவற்றோடு கொஞ்சம் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.

நொய்யரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும்.ஒரு கொதி வந்ததும் மிளகு, சீரகம், மஞ்சள் கலவையையும் அதனோடு சேர்த்துக் கொதிக்கவிட்டு பின்பு தேவையான அளவு உப்பு கஞ்சியாக்கி இறக்கவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். இடுப்பு பகுதிக்கு வலு கிடைக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டத்தை உண்டாக்கும் அற்புதமான ஆரோக்கியமான கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : marriage couple energy தாம்பத்யம் திருமணம்

More from the section

சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்
ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் தேனீர் இது!
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் என்ன பலன்?
எது நலம் / நலமற்றது?  வாருங்கள் தெரிந்து கொள்ளலாம், இது தேசிய ஊட்டச்சத்து மாதம்!
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு