உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீராக கரைத்து வெளியேற்றும் அற்புத குளிர்பானம்!

ஆப்பிள்  மற்றும் வெள்ளரிக்காய் இரண்டையும் சிறிதாக அரிந்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து
உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீராக கரைத்து வெளியேற்றும் அற்புத குளிர்பானம்!

ஆப்பிள் - வெள்ளரிக்காய் குளிர்பானம்

தேவையான பொருட்கள்

இனிப்பு ஆப்பிள் -  2
நடுத்தரமான வெள்ளரிக்காய் -  2 
எலுமிச்சம் பழச்சாறு - 50 மி.லி
தண்ணீர் - 200 மி.லி
தேன் - 2 தேக்கரண்டி

செய்முறை : ஆப்பிள்  மற்றும் வெள்ளரிக்காய் இரண்டையும் சிறிதாக அரிந்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி தேன் கலந்து பருகவும்.

பயன்கள் : இந்த குளிர்பானத்தை காலை அல்லது மதிய வேளை உணவு சாப்பிட்ட பின்பு இதனை குடித்து  வந்தால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை  நீராக கரைத்து உடலை விட்டு வெளியேற்றும்.

பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com