திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு கீரைக் கடைசல்

By கோவை பாலா| Published: 31st July 2019 12:42 PM

பசலைக் கீரைக் கடைசல்

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - 2 கட்டு 
சிறுபருப்பு - 100 கிராம்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
சீரகத் தூள் - அரை ஸ்பூன்
மிளகுத் தூள் - 10 கிராம்
மஞ்சள், உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை

முதலில் பசலைக் கீரையைச் சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறுபருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து வேக வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து  வதக்கிய பின்பு அதனுடன் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து வேக வைத்த கீரையுடன்  வதக்கியவற்றையும் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து  பின்பு இறக்கி  நன்கு கடைந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பயன்கள்
 
வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கீரைக் கடைசல் சத்தான உணவு மட்டுமல்ல அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் குடற்புண் நோயாளிகளுக்கு  இந்தக் கீரைக் கடைசல்  மிகவும் உகந்தது.

குறிப்பு : இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : healthy food food kids food vegetables Green keerai pasalai keerai food for children snacks for kids

More from the section

உடல் பலம் அதிகரிக்கச் செய்யும் சாமைக் கஞ்சி!
குழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி
ஆஸ்துமா உள்ளவர்கள் இரவு அருந்தக் கூடிய கஞ்சி
செரிமானக் குறைபாட்டை சீராக்கும் கஞ்சி
உடல் சூட்டைத் தணித்து வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கஞ்சி