திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

உங்கள் எலும்புக்கு வலுசேர்க்கும் அற்புத உணவு

By கோவை பாலா| Published: 12th July 2019 11:28 AM

 
தண்டுக் கீரைக் கூட்டு

தேவையான பொருட்கள்

தண்டுக்கீரை (நறுக்கியது) - 200 கிராம்
கடுகு - அரை ஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் - கால் ஸ்பூன்
துவரம் பருப்பு - 100 கிராம்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கையளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை நார் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள கீரைத் தண்டு, மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்து அதனுடன் வேகவைத்த பருப்பைக் கடைந்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து வேக விடவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து இறக்கவும்.

பயன்கள்

இந்த தண்டுக் கீரைக் கடைசலை தினமும் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் பலவீனமான எலும்புகள் வலுப்பெறும். இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : healthy food thandu keerai keerai kootu

More from the section

சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்
ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் தேனீர் இது!
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் என்ன பலன்?
எது நலம் / நலமற்றது?  வாருங்கள் தெரிந்து கொள்ளலாம், இது தேசிய ஊட்டச்சத்து மாதம்!
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு