செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

நரம்புத் தளர்ச்சி, கை  கால் நடுக்கம் மற்றும் உடல் பலவீன குறைபாட்டை சீராக்கும் தேநீர்

By கோவை பாலா| DIN | Published: 11th July 2019 09:53 AM

கருங்காலிப் பட்டை தேநீர்

தேவையான பொருட்கள்

கருங்காலிப்பட்டை - கால் கிலோ
மருதம்பட்டை - கால் கிலோ 
சுக்கு - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்

செய்முறை : இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

பலன்கள் : இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம், உடல் பலவீனம் போன்ற குறைபாடுகள் தீரும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : weakness body healthy life body weakness tiredness pain nervous

More from the section

காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி
முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்
சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்
ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் தேனீர் இது!
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் என்ன பலன்?