பார்த்துப் பார்த்து காய்கறி வாங்கினாலும் சில சமயம் சொதப்பிவிடுகிறதா? இதோ ஒரு செக் லிஸ்ட்!

அவரைக்காயில் விதை பெரியதாக இருந்தால் முற்றியது என்று அர்த்தம். விதை சிறியதாக இருந்தால் நார் எதுவும் இல்லாமல் சுவையாக இருக்கும்.
பார்த்துப் பார்த்து காய்கறி வாங்கினாலும் சில சமயம் சொதப்பிவிடுகிறதா? இதோ ஒரு செக் லிஸ்ட்!

அவரைக்காயில் விதை பெரியதாக இருந்தால் முற்றியது என்று அர்த்தம். விதை சிறியதாக இருந்தால் நார் எதுவும் இல்லாமல் சுவையாக இருக்கும்.

நீளமான பச்சை மிளகாயில் காரம் சற்று குறைவாக இருக்கும். குண்டான பச்சைமிளகாயில் தான் காரம் தூக்கலாகவும், வாசனை அற்புதமாகவும் இருக்கும். எனவே குண்டான பச்சை மிளகாயை வாங்குவது நல்லது.

மொச்சை கொட்டையானது அளவில் பெரியதாக இருந்தால் தரமானது என்று அர்த்தம்.

செளசெள காயை வாங்கும் பொழுது அதன் வாய்ப்பகுதியில் விரிசல் பெரியதாக இல்லாமல் இருக்குமாறு வாங்க வேண்டும். விரிசல் அதிகமாக இருந்தால் முற்றியது என்று அர்த்தம்.

வாழைத்தண்டு வாங்கும் பொழுது மேல்பகுதியில் அதிகம் நார் இல்லாமல், தண்டுப்பகுதி சிறியதாக இருப்பதை வாங்க வேண்டும்.

பிரஞ்ச் பீன்ஸில் நார் அதிகம் இருக்கும். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் மிருதுவாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.

சேனைக்கிழங்கை உள்பக்கம் வெட்டினால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதை தான் வாங்க வேண்டும். ஒரு முனை நீளமாக, முளை விட்டது போல் இருக்கும் கிழங்குகளை வாங்க கூடாது.

வெள்ளரிக்காயின் மேல் பகுதியை நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய் என அர்த்தம்.

பூண்டு வாங்கும் பொழுது, பூண்டு பல் வெளியில் தெரியுமாறு இருப்பதை தான் வாங்க வேண்டும்.

மாங்காயைத் தட்டி பார்த்து வாங்க வேண்டும். சத்தம் கேட்டால் உள்ளே உள்ள கொட்டை சிறியதாகவும், சதை சற்று அதிகமாகவும் இருக்கும்.

பீர்க்கங்காய் வாங்கும் பொழுது அடிப்பகுதி மட்டும் குண்டாக இல்லாமல், காய் முழுவதும் ஒரே அளவாக இருப்பதுபோன்று வாங்க வேண்டும்.
 

 - ஏ.எஸ்.கோவிந்தராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com