திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கஞ்சி

By கோவை பாலா| Published: 22nd August 2019 11:09 AM

 
தாமரைப் பருப்புக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
தாமரைப் பருப்பு - 100 கிராம்
புழுங்கலரிசி நொய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
 
முதலில் தாமரைக் கொட்டையை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை வறுத்துத் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். புழுங்கலரிசி நொய்யை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  வறுத்து வைத்துள்ள புழுங்கலரிசி நொய்யையும், அரைத்து வைத்துள்ள தாமரைப் பருப்பையும் கலந்து கொதிக்க வைக்கவும். புழுங்கலரிசி நொய் நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு போட்டுக் கிளறி இறக்கி வைத்து பருகலாம்.

பயன்கள்

இந்தத் தாமரைப் பருப்புக் கஞ்சி அடிக்கடி உண்டாகும் விக்கல் மற்றும் வாந்தியை குணப்படுத்தும். நாக்கில் சுவைத்தன்மை உணர முடியாதவர்களுக்கு அதை உணர வைக்கும். இவை அனைத்திற்கும் மேலாக ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : porridge potent impotency in men

More from the section

முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்
சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்
ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் தேனீர் இது!
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் என்ன பலன்?
எது நலம் / நலமற்றது?  வாருங்கள் தெரிந்து கொள்ளலாம், இது தேசிய ஊட்டச்சத்து மாதம்!