இந்த சீஸனில் கிடைக்கும் இந்தப் பழத்தை உடனடியாக வாங்குங்க!

விளாமரம் என்று அழைக்கப்படும் மரத்தின் பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும்.
இந்த சீஸனில் கிடைக்கும் இந்தப் பழத்தை உடனடியாக வாங்குங்க!

விளாமரம் என்று அழைக்கப்படும் மரத்தின் பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும். யாரும் ஆர்வமாக நட்டு வளர்க்க முன்வராத காரணத்தாலேயே இது அரிய வகை மரமாக மாறிவிட்டது. விளாமரங்களை வணிக ரீதியில் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். அத்தகைய ஆதாயம் நிறைந்த விளாமரம் பற்றிய சில தகவல்கள் இதோ:

விளா மரத்தின் தாவர அறிவியல் பெயர் பெரோனியா எலிஃபெண்டம் (Feronia Elephantum). ஆங்கிலத்தில் Wood Apple என்பார்கள். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தைவான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டது. இம்மரம் காடுகளில் அதிகம் காணப்படும். தோட்டங்களிலும், கோயில்களிலும் வளர்க்கப்படுகிறது. 

காயாக இருக்கும்போது அதன் சதை துவர்க்கும். பழுத்தால் துவர்ப்பும், புளிப்பும் கலந்த புது சுவையாகும். விளா ஓடுகளை, கைவினைப் பொருள்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
 

விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள்:

  • தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்துள்ள பழம். ரத்தத்தை விருத்தி படுத்துவதோடு, சுத்திகரிப்பும் செய்கிறது.
  • விளாம்பழத்தில் "வைட்டமின் பி2' மற்றும் "வைட்டமின் ஏ', சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
  • விளாம்பழ மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
  • தயிருடன் விளாங் காயைப் பச்சடி போல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண் (அல்சர்) குணமாகும்.
  • வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறி சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.
  • விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
  • தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும். 
  • விளா மர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க வாயுத் தொல்லை நீங்கும்.
  • விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க. நாள்பட்ட பேதி சரியாகும். 
  • விளா மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இரைப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும். பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
  • பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும். நல்ல வலி நிவாரணியாகவும் விளாம்பழம் செயல்படுகிறது. 
  • இதன் கொழுந்து இலையை நீரில் போட்டுக் குடித்து வர வாயுத் தொல்லை ஒழியும். பித்தத்தைத் தணிக்கவும் இதன் இலை உதவுகிறது.
  • இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை போன்றவற்றை விளாம் பழம் குணப்படுத்தும்.
  • விளாம் பிசினை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை தலா ஒரு சிட்டிகை வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட வயிற்றுப் போக்கு, வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு ரணம், மாதவிடாய் கோளாறு ஆகியவை தீரும். இதற்கு உப்பு இல்லாப் பத்தியம் தேவை.

- எல்.மோகனசுந்தரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com