வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்

By கோவை பாலா| Published: 19th August 2019 10:53 AM

பொட்டுக் கடலை சோளக் கஞ்சி

தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை - 25  கிராம்
சோளம் - 25  கிராம்
வெல்லம் - 25  கிராம்
தண்ணீர் - 250  மி.லி

செய்முறை
 
முதலில் பொட்டுக் கடலையை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். சோளத்தை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்பு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 200 மி.லி தண்ணீர் விட்டு சோள மாவு விழுதை நன்றாக கரைக்கவும். கரைத்த சோளமாவுப் பாலை துணியில் வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பாலை ஊற்றி கொதிக்க விடவும். வறுத்தரைத்த பொட்டுக்கடலை மாவில் மீதியுள்ள தண்ணீரை சூடாக்கி ஊற்றி கரைத்துக் கொள்ளவும். கரைத்த பொட்டுக்கடலை மாவை கொதிக்கும் சோளப் பாலில் போடவும். போடும் போது கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையென்றால் கட்டி தட்டும். பத்து நிமிடம் கொதித்த பின்பு வெல்லத்தைப் பொடி செய்து போட்டு மேலும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து பின்பு இறக்கவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை வயிற்றுப் போக்கினால் பாதிக்கபடுபவர்கள் உண்ணுவதற்கு உன்னதமான உணவு.மேலும் இந்த பொட்டுக் கடலை சோளக் கஞ்சியை அனைவரம் தினசரி உணவாகவும் பயன்படுத்தலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : stomach ache stomach pain dysentary loose motion health problems

More from the section

சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்
காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி
முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்