வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

உடல் பலம் அதிகரிக்கச் செய்யும் சாமைக் கஞ்சி!

By கோவை பாலா| DIN | Published: 18th August 2019 10:55 AM

சாமைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாமை மாவு (வறுத்தது) -  50 கிராம்
கடலைப் பிண்ணாக்கு மாவு (வறுத்தது) - 25 கிராம்
உளுந்தம் மாவு (வறுத்தது) - 25  கிராம்
வெல்லம் - 20  கிராம்

செய்முறை

முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும். வறுத்த மாவுகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெந்நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சிறிது சிறிதாக கொதிக்கும் வெல்லத் தண்ணீரில் கிளறிக் கொண்டே சேர்க்கவும். 10 முதல் 15  நிமிடம் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி மிதமான சூட்டில் குடிக்கவும்.

பயன்கள்

இந்த கஞ்சி மிகவும் புரதச் சத்து நிறைந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றதும் உடலைப் பலப்படுத்தக் கூடியதுமான அற்புதமான ஆரோக்கியம் நிறைந்த கஞ்சி. 

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : millet soup soup recipe healthy soup millet recipe

More from the section

சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்
காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி
முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்