வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

குழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி

By கோவை பாலா| Published: 17th August 2019 11:14 AM

சோளக் கஞ்சி

தேவையான பொருட்கள்

காரட் துருவியது -  அரை கப்
சோள விதை  அரைத்தது - அரை கப்
அரிசி - ஒரு கப்
தண்ணீர் - 2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்தப் பிறகு அதில் அரிசி மற்றும் சோளத்தை போடவும். நன்கு வெந்ததும்  அதனுடன் காரட் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை குழந்தைகளும்  , நீண்ட நாள் உடல் நலிவடைந்துள்ளவர்களும் காலை வேளை உணவாக  உண்ணுவதற்கு  உகந்த கஞ்சியாகவும்  உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கக் கூடிய உகந்த உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : health kid health children health porridge recipe

More from the section

சிறுநீரக செயலிழப்பை சீர் செய்யும் அற்புதமான கஞ்சி
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்
காய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி
முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்