சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

இடுப்பு வலியைப் போக்கும் ஆரோக்கிய பானம்

By கோவை பாலா| Published: 12th August 2019 10:20 AM

 

கேரட் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

கேரட் - 100 கிராம் (துருவியது)
சின்ன வெங்காயம் -  25 கிராம்
அரிசி நொய் - 100 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எள் - 2  தேக்கரண்டி
உப்பு -  தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசி நொய்யை  ஒரு மணி நேரம் தண்ணீரில் நனைத்து வைத்திருந்து பின்பு களைந்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அவற்றில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் இவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். அத்துடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நனைத்து வைத்துள்ள அரிசி நொய்யைச் சேர்க்க வேண்டும். பின்பு ஆறு தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து  வெந்த பின் அடுப்பைக் குறைத்து கஞ்சி சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து அதனுடன் எள்ளைத் சேர்த்து கலக்கி மிதமான சூட்டில் குடிக்கவும்.

பயன்கள்

இடுப்பு வலியினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு வேளை உணவாக இந்தக் கஞ்சியை  குடித்து வருவதன் மூலம் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். 

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : carrot porridge health

More from the section

உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையையும் கொடுக்கும் அமிர்தமான உணவு
ஆண்மையை அதிகரிக்கும் அற்புத கஞ்சி
இந்த சீஸனில் கிடைக்கும் இந்தப் பழத்தை உடனடியாக வாங்குங்க!
வயிற்று வலி மற்றும் பசியின்மையைப் போக்கும் ஆரோக்கிய கஞ்சி
பிஸ்கெட் நல்லதா கெட்டதா? இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!