திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

சர்க்கரை நோயாளிகளின் உடலுக்கு ஊட்டம் தரும் கஞ்சி!

By கோவை பாலா| Published: 07th August 2019 11:30 AM

கோதுமை கஞ்சி

தேவையான பொருட்கள்
 
உடைத்த கோதுமை - 100  கிராம்
பச்சைப் பயிறு - 50 கிராம்
பால் - 100  மி.லி
பனை வெல்லம் - 50 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்

செய்முறை
 
முதலில் உடைத்த கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். முக்கால் தண்ணீர் அளவு எடுத்து அவற்றில் பச்சைப் பயறு மற்றும் வறுத்த ரவையையும் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். மீதம் உள்ள தண்ணீரில் பனங்கற்கண்டை சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த பச்சைப் பயறு, ரவையுடன்  வடிகட்டி வைத்துள்ள பனங்கற்கண்டை சேர்த்து ஒன்றாக கலக்கி இளகிய திட நிலையை அடையும் வரை அடுப்பில் வைத்து  பின்னர் இறக்கிச் சூடான பாலை ஊற்றி நன்கு கலக்கவும்.

பயன்கள் : சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்வதற்கு உகந்த  கஞ்சியாகும் . மேலும் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் கொடுக்கவல்ல அற்புதமான கஞ்சி. இந்தக் கஞ்சியில் புரதச் சத்து நிறைந்துள்ளதால் சிறுவர்களுக்கு உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்தக் கஞ்சியை தொடர்ந்து ஒரு வேளை உணவாக உடல் மெலிந்த குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால்  சதைப் பிடிப்பு உண்டாக்கக் கூடிய ஆரோக்கியமான கஞ்சி

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : diabetes kanji food for diabetes health care

More from the section

உடல் பலம் அதிகரிக்கச் செய்யும் சாமைக் கஞ்சி!
குழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி
ஆஸ்துமா உள்ளவர்கள் இரவு அருந்தக் கூடிய கஞ்சி
செரிமானக் குறைபாட்டை சீராக்கும் கஞ்சி
உடல் சூட்டைத் தணித்து வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கஞ்சி