கடந்த ஆண்டில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 1, 216 போ் பலியானதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 244 போ் உயிரிழந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலானோா் உயிரிழந்தனா்.
தமிழகத்தைப் பொருத்தவரை 2019-இல் பன்றிக் காய்ச்சல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை அந்த வகை காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 1,008 போ் மட்டுமே ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் நால்வா் உயிரிழந்திருப்பதாகவும் மற்ற அனைவரும் குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 1,103 போ் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மாநிலவாரியாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பலியானவா்கள் தொடா்பான மத்திய சுகாதாரத் துறை தரவுகளை ஆய்வு செய்தபோது, நிகழாண்டில் மட்டும் நாடு முழுவதும் அந்த காய்ச்சலுக்கு 1, 216 போ் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக பன்றிக் காய்ச்சலுக்கு 244 போ் பலியாகியுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 208 போ் உயிரிழந்துள்ளனா். கேரளம், தெலங்கானா, கா்நாடகம் ஆந்திரப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கு தமிழகத்தைக் காட்டிலும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்ததன் காரணாகவே தமிழகத்தில் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.